உள்ளூர் செய்திகள்

சேலம் மாநகரில் 22 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

Published On 2023-06-24 14:59 IST   |   Update On 2023-06-24 14:59:00 IST
  • சேலம் மாநகரத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 22 பேரை போலீஸ் கமிஷ னர் விஜயகுமாரி நேற்று இரவு அதிரடியாக மாறுதல் செய்து உத்தரவிட்டார்.
  • மாறுதல் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் உடனடியாக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

சேலம்:

சேலம் மாநகரத்தில் உள்ள போலீஸ் நிலை யங்களில் சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 22 பேரை போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி நேற்று இரவு அதிரடியாக மாறுதல் செய்து உத்தரவிட்டார்.

அதன்படி, சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், டவுன் குற்ற பிரிவிற்கும், அன்னதா னப்பட்டி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சந்திரகலா, செவ்வாய்பேட்டைக்கும் (சட்டம்-ஒழுங்கு), காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் சின்ன தங்கம் அன்னதா னப்பட்டிக்கும் (சட்டம் ஒழுங்கு) மாற்றப்பட்டு உள்ளனர்.

இதேபோல் அம்மா பேட்டை இன்ஸ்பெக்டர் கணேசன் (சட்டம்-ஒழுங்கு) அன்னதானப்பட்டி குற்ற பிரிவிற்கும், அன்னதா னப்பட்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராம கிருஷ்ணன், கிச்சிப்பா ளையம் குற்றப்பிரிவிற்கும், சேலம் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராணி, கொண்டலாம்பட்டி குற்றப்பிரிவிற்கும், பள்ளப்பட்டி இன்ஸ்பெக் டர் ராணி (சட்டம்-ஒழுங்கு), டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத் திற்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் (சட்டம்-ஒழுங்கு), அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கும் (சட்டம்-ஒழுங்கு), சேலம் மாநகர மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வி, அஸ்தம்பட்டி குற்றப்பிரி விற்கும், அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சிவகாமி, கன்னங்குறிச்சி குற்றப்பிரிவிற்கும், வீராணம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன், இதே காவல் நிலையத்தில் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஆகவும், இங்கு சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த கஸ்தூரி, அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

பள்ளப்பட்டி குற்றப் பரிவு இன்ஸ்பெக்டர் நெப் போலியன், இதே போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஆகவும், சேலம் மாநகர நில அபகரிப்பு பிரிவு இன்ஸ் பெக்டர் பழனியம்மாள், பள்ளப்பட்டி குற்றப்பிரி விற்கும், கன்னங்குறிச்சி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவகுமார், சூரமங்கலம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக் டர் ஆகவும், இரும்பாலை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாரதா, இதே போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக வும், கொண்டலாம்பட்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி இரும்பாலை போலீஸ் நிலைய குற்ற பிரிவிற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ் பெக்டர் மனோன்மணி கருப்பூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு இன்ஸ் பெக்டர் ஆகவும் மாற்றப் பட்டு உள்ளனர்.

அஸ்தம்பட்டி குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் சசி கலா, சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலை யத்திற்கும், இரும்பாலை சட்டம் ஒழுங்கு இன்ஸ் பெக்டர் ஜெய்சல்குமார், மாநகர மத்திய குற்றப்பிரி விற்கும், கருப்பூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தமிழரசி மாநகர நில அபகரிப்பு பிரிவிற்கும், சேலம் டவுன் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சம்மங்கி, மாநகர மதுவிலக்கு பிரி விற்கும் மாறுதல் செய்யப்பட்டனர்.

மாறுதல் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் உடனடி யாக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அறிவுறுத் தப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News