அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்ததை வரவேற்கும் விதமாக சேலம் மாநகர மாவட்ட அ.தி.மு.க.வினர் அண்ணா பூங்கா அருகே உள்ள
எம்.ஜி.ஆர் -ஜெயலலிதா ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய போது எடுத்த படம்.
சேலத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
- அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பி.எஸ்.சை நீக்கியது செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
- பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
சேலம்
அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பி.எஸ்.சை நீக்கியது செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதனை வரவேற்று சேலம் மாநகர மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சேலம் அண்ணா பூங்காவில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா சிலைக்கு அமைப்புச் செயலாளர் செம்மலை முன்னிலையில் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் தலைமையில் மாலை அணிவித்தனர். பின்னர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
இந்த நிகழ்ச்சியில் பாலசுப்ரமணியன் எம்.எல்.ஏ, அவைத் தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் எம்.கே.செல்வராஜூ, ரவிச்சந்திரன், சக்திவேல், முன்னாள் மேயர் சவுண்டப்பன், மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம், மாவட்ட இணை செயலாளர் உமாராஜ், துணை செயலாளர் லட்சுமி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஜான்கென்னடி, பட்டு ராமச்சந்திரன், சரோஜா, பகுதி செயலாளர்கள் மாரியப்பன், பாலு, சரவணன், யாதவ மூர்த்தி, ஜெயபிரகாஷ், சண்முகம், பாண்டியன், முருகன், கவுன்சிலர்கள் கே.சி.செல்வராஜ், ஜனார்த்தனன், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் சரவணமணி, ராம்ராஜ், ஈஸ்வரன், வக்கீல் கனகராஜ், ஜமுனா ராணி, சுந்தரபாண்டியன், ராமசாமி, முன்னாள் மண்டல குழு தலைவர் மோகன், இளைஞரணி இணை செயலாளர் ஜிம் ராமு, தலைவர் அருள்ராம், வேபிரிட்ஜ் ராஜேந்திரன், பேரவை இணை செயலாளர் செங்கோட்டையன், துணைசெயலாளர் தங்கராஜ், பாமா கண்ணன் மற்றும் வட்டக் செயலாளர்கள் புல்லட் ராஜேந்திரன், கிருபாகரன், பிரகாஷ், புல்லட் செந்தில், ஸ்ரீதர், மேகலா பழனிசாமி, விநாயகம், மார்க்பந்து, நேதாஜி, கர்ணன், நாகராஜ், சகாயம், ரஞ்சித், ஜெகதீஷ், ரமளிசக்தி அன்பு, சந்துரு, ராஜாராம், ஜானகிராம், இளைஞர் பாசறை செயலாளர் வி.எஸ்.பிரவீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.