உள்ளூர் செய்திகள்

சாலைப்புதூர் வேளாண் ஒழுங்கு முறை கூடத்தில் ரூ.1.23 கோடிக்கு விற்பனை

Published On 2023-04-18 15:21 IST   |   Update On 2023-04-18 15:21:00 IST
  • அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
  • இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவ சாயிகள் தாங்கள் விளை வித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமா நிலங்களை சேர்ந்த வியா பாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 37.45 குவிண்டால் எடை கொண்ட 11,997 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.27.39-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.21.71-க்கும், சராசரி விலையாக ரூ.26.29-க்கும் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 92ஆயிரத்து 508-க்கு விற்பனையானது.

அதேபோல் 256.33 1/2குவிண்டால் எடை கொண்ட 515-மூட்டை தேங்காய் பருப்பு விற்ப னைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.82.39-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.79.69-க்கும், சராசரி விலையாக ரூ.81.99-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.79.66-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.63.69-க்கும், சராசரி விலையாக ரூ.77.77-க்கும் என மொத்தம் ரூ.19லட்சத்து 15ஆயிரத்து 536-க்கு விற்பனையானது.

அதேபோல் 713.05 குவிண்டால் எடை கொண்ட 953-மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.152.99-க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.136.99-க்கும், சராசரி விலையாக ரூ.150.99-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.152.99-க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.136.99-க்கும், சராசரி விலையாக ரூ.150.99-க்கும், வெள்ளை எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.164.99-க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.162.99-க்கும், சராசரி விலையாக ரூ.160.99-க்கும் என மொத்தம் ரூ. 1 கோடியே 3 லட்சத்து 61ஆயிரத்து 902-க்கு விற்பனையானது.

சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 1 கோடியே 23 லட்சத்து 69 ஆயிரத்து 946-க்கு விற்பனையானது.

Tags:    

Similar News