உள்ளூர் செய்திகள்

மின் பணியாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி

Published On 2023-04-13 10:13 GMT   |   Update On 2023-04-13 10:13 GMT
  • மன்னார்குடியில் மின் விபத்துகளை தடுக்க பணியாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
  • மின் விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

திருவாரூர்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருவாரூர் மின் பகிர்மான வட்டம் மன்னார்குடி நகர உப கோட்டம் சார்பில் மின் வாரிய ஊழியர்களுக்கு மின் பாதுகாப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

நகர உதவி செயற் பொறியாளர் சா.சம்பத் தலைமை தாங்கினார். முகாமில் பணியின் போது மின் விபத்து ஏற்படாமல் பணியாற்ற வேண்டும்.

மன்னார்குடியில் மின் விபத்துகளை தடுக்க பணியாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

கையுறை, இடுப்புக் கயிறு மற்றும் எர்த் ராடு ஆகிய மின் பாதுகாப்பு சாதனங்களை முறையாக பயன்படுத்தி விழிப்போடு பணியாற்ற வேண்டும்.

இயற்கை இடா்பாடுகளால் மின் கம்பிகள் அறுந்து விழுந்தாலோ, மின் கசிவுகள் ஏற்பட்டாலோ உடனடியாக அந்த இடத்தில் மின்சாரத்தை துண்டித்து முன் எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும் மின் விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

முடிவில் அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Tags:    

Similar News