உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் இன்று கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை

Published On 2023-10-10 14:09 IST   |   Update On 2023-10-10 14:09:00 IST
  • கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தூத்துக்குடி புதிய துறைமுகம் பகுதியில் இருந்து காலை 7 மணிக்கு படகுகள் மூலம் கடலுக்குள் சென்றனர்.
  • இன்று சாகர் கவாஜ் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கி உள்ளது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் சாகர் கவாஜ் என்ற பெயரில் கடலோர பாதுகாப்பு போலீசாரின் 2 நாள் பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை தொடங்கியது.

கூட்டு பாதுகாப்பு ஒத்திகை

கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் டி.எஸ்.பி. பிரதாபன், இன்ஸ்பெக்டர் சைரஸ், தலைமையில் பாதுகாப்பு குழும போலீசார் தூத்துக்குடி புதிய துறைமுகம் பகுதியில் இருந்து காலை 7 மணிக்கு படகுகள் மூலம் கடலுக்குள் சென்றனர்.

இந்த ஒத்திகையில் கடலோர காவல் படை, இந்திய கடற் பாதுகாப்பு படை, கியூ பிரிவு, உளவுப்பிரிவு , மத்திய தொழில் பாதுகாப்பு படை உட்பட போலீசார் கலந்து கொண்டு கூட்டு பாதுகாப்பு ஒத்திகை, தீவிரவாத தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு கொள்கின்றனர்.

கடந்த 2007-ம் ஆண்டு மும்பையில் கடல் வழியாக தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து 2008-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு மற்றும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கடலோர மாவட்டங்களில் ஆப்ரேஷன் அம்லா, சுரக்சா, ரக்சாக், சாகர் கவாஜ், சிவிஜில் உள்ளிட்ட பெயர்களில் போலீசாரின் கூட்டு பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்று சாகர் கவாஜ் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கி உள்ளது. இந்த ஒத்திகை நாளை ( புதன் கிழமை) மாலை வரை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News