உள்ளூர் செய்திகள்

புதிய ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் சண்முகையா எம்.எல்.ஏ குத்துவிளக்கு ஏற்றி வைத்தபோது எடுத்தபடம்.

ஓட்டப்பிடாரம் அருகே ரூ. 1½ கோடியில் புதிய ஆதிதிராவிடர் மாணவர் விடுதி-காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

Published On 2023-05-16 08:19 GMT   |   Update On 2023-05-16 08:19 GMT
  • விடுதியில் தங்குமிடம், சமையலறை ஆகியவற்றை எம்.எல்.ஏ பார்வையிட்டார்.
  • மாணவர்களுக்கு அட்டவணையில் உள்ள உணவு சரியான முறையில் வழங்க வேண்டும்

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேட்டூர் தாட்கோ நிதி மூலம் ரூ. 2 கோடியே 51 லட்சம் செலவில் புதிய ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

எம்.எல்.ஏ. ஆய்வு

அதனைத் தொடர்ந்து ஆதிதிராவிட மாணவர் விடுதியில் சண்முகையா எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி விடுதியை திறந்து வைத்தார்.

பின்னர் மாணவர் விடுதியில் தங்குமிடம், உணவு அருந்தும் இடம் மற்றும் சமையலறை ஆகியவற்றை எம்.எல்.ஏ பார்வையிட்டார்.

அப்போது மாணவ ர்களுக்கு அட்டவணையில் உள்ள உணவு சரியான முறையில் வழங்க வேண்டும் என விடுதி காப்பாளரிடம் அறிவுறுத்தினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், தாட்கோ செயற்பொறியாளர் பால்ராஜ், ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ், யூனியன் கூடுதல் ஆணையாளர் ராம்ராஜ், வட்ட வழங்க அலுவலர் கருப்பசாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைராஜ், வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார், விடுதி காப்பாளர்கள் வேல்முருகன், சுரேஷ், முத்துசெல்வம், முத்துக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் சித்ராதேவி, கனகரத்தினம், பஞ்சாயத்து தலைவர்கள் அருண்குமார், இளையராஜா, மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News