உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட ஏழுமலை, சின்னராஜ், ராஜசேகர்.

சங்கராபுரம் தனியார் நிதிநிறுவனத்தில் ரூ.17 லட்சம் மோசடி: 3 பேர் கைது

Published On 2023-06-10 13:24 IST   |   Update On 2023-06-10 13:24:00 IST
  • 6 அடமான போலி ஆவணங்களை தயார் செய்து, அதன்மூலம் ரூ.17 லட்சத்து 20 ஆயிரத்து 131 மோசடி செய்தது தெரிந்தது.
  • வட்டார மேலாளர் சமதகிரி நிலப்பா சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் தனியார் கிளை நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் தலைமை அலுவலராக சின்னசேலம் அருகே கடத்தூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (வயது 26), உதவி தலைமை அலுவலராக பூண்டி அம்மையரகம் கிராமத்தை சேர்ந்த சின்னராஜ் (25), இளநிலை உதவியாளராக சங்கராபுரம் பூட்டை சாலையை சேர்ந்த ராஜசேகர் (26) ஆகியோர் பணி புரிந்து வந்தனர். இந்த கிளை நிறுவனத்தில் அதிகாரிகள் குழுவினர் தணிக்கை செய்தனர்.

இதில் ஏழுமலை உள்பட 3 பேரும் சேர்ந்து நகையை அடமானம் வைத்தது போல் 6 அடமான போலி ஆவணங்களை தயார் செய்து, அதன்மூலம் ரூ.17 லட்சத்து 20 ஆயிரத்து 131 மோசடி செய்தது தெரிந்தது.இது குறித்து தனியார் நிறுவனத்தில் வட்டார மேலாளர் சமதகிரி நிலப்பா சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து ஏழுமலை, சின்னராஜ், ராஜசேகர் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News