உள்ளூர் செய்திகள்

சாலையோரம் உள்ள கையேந்தி பவன்.

சக்கைப் போடுபோடும் ரோட்டோர டிபன் கடைகள்

Published On 2022-10-11 10:04 GMT   |   Update On 2022-10-11 10:04 GMT
  • உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களுக்கு சிறந்த முறையில் சிற்றுண்டி மற்றும் உணவு வகைகள் உண்ணக் கிடைக்கின்றன.
  • இச்சாலையோர கையேந்தி பவன்களில் விரும்பி உண்ணும் வாடிக்கையாளராகி உள்ளார்கள்

திருவையாறு:

திருவையாறு நகரின் மையப் பகுதியான தெற்கு வீதி மற்றும் பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ள ஓடத்துறைத் தெரு ஆகிய கடைத் தெருக்களில் ஏற்கனவே பாரம்பரியமாகவும் சமீப காலங்களில் தொடங்கி நடந்து. வருவதுமான டிபன் மற்றும் சாப்பாடு ஓட்டல்கள் நிறைய உள்ளன.

இந்த ஓட்டல்கள் மூலம் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களுக்கு சிறந்த முறையில் சிற்றுண்டி மற்றும் உணவு வகைகள் தாராளமாக உண்ணக் கிடைக்கின்றன. இந்நிலையில் சமீப காலமாக திருவையாறு நகரத்துக்கு வெளியே விளாங்குடி வழியாக அரியலூர், வடுகக்குடி வழியாக கல்லணை மற்றும் காருகுடி வழியாக.

கும்பகோணம் ஆகிய நகரங்களுக்கு செல்லும் குடியிருப்பு ஏதும் இல்லாத சாலையோரங்களில் தோன்றியுள்ள டிபன் கடைகளில் விரும்பிச் சாப்பிடுபவர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.

சாலையில் செல்லும் மணல் லாரி டிரைவர் மற்றும் கிளீனர்களும், ஆட்டோ மற்றும் கார்களில் செல்லும் பயணிகளும் டிராபிக் இடையூறு இல்லாமல் வண்டிகளை ஓரமாக நிறுத்திவிட்டு விலை குறைவாகவும், சுவை மிகுதியாகவும் வீட்டுமுறைத் தயாரிப்பில் சுடச்சுடக் கிடைக்கும் எளிய வகை டிபன்களை சாலையோரக் கடைகளில் வாங்கிச் சாப்பிட்டுச் செல்கிறார்கள்.

மேலும், அருகிலுள்ள கிராமங்களில் இருந்து பாதசாரியாக சாலையில் நடந்தும் சைக்கிளிலும் இருசக்கர வாகனங்களிலும் செல்பவர்கள் இச்சாலையோர கையேந்தி பவன்களில் விரும்பி உண்ணும் வாடிக்கையாளராகி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News