உள்ளூர் செய்திகள்
சுல்தான்பேட்டை அருகே போலீஸ்காரர் வீட்டில் கொள்ளை
- சுப்பிரமணியம் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.
- 2¾ பவுன் தங்க நகைகளை கொள்ளை போனது.
கோவை
கோவை சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 63). ஓய்வு பெற்ற போலீஸ்காரர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் ராமநாதபுரத்தில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார்.
அப்போது சுப்பிரமணியம் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்றனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த கம்மல், மோதிரம், உள்பட 2 ¾பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். மறுநாள் வீட்டிற்கு திரும்பிய சுப்பிரமணியம் நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இது குறித்து சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இது குறித்து சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.