பொள்ளாச்சி ரோட்டில் சாலையோரம் படிந்து கிடக்கும் மணலால் அடிக்கடி விபத்து வாகன ஓட்டிகள் அவதி.
- வாகனங்கள் ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
- நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குனியமுத்தூர்,
கோவையில் பிரதான சாலைகள் அனைத்திலும் சாலையோரம் மணல் படிந்து காணப்படுகிறது. மழை பெய்து முடிந்தும், திரும்பி வெயில் அடிக்கும் பொழுது அவை அனைத்தும் புழுதியாக மாறி விடுகிறது. இதனால் வாகனங்கள் ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
குறிப்பாக பொள்ளாச்சி ரோட்டில் சாலையோரம் மணல் அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மணலில் சறுக்கி விழும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. இதுகுறித்து இருசக்கர வாகன ஓட்டிகள் கூறும்போது, மழைக்காலமாக இருக்கும் போது சேறு படிந்த நிலையில் டயர் வழுக்கி கீழே விழும் சூழ்நிலை ஏற்படுகிறது.
அதுவே வெயில் காலமாக இருக்கும் போது, புழுதி பறந்து கண்ணில் விழும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதிவேகமாக முன்னாள் செல்லும் பேருந்துகள் மூலம் புழுதி பறப்பதால், கண் எரிச்சல் ஏற்பட்டு முன்னால் சென்று கொண்டிருக்கும் வாகனத்தின் மீது மோதி விடும் நிலை ஏற்படுகிறது. பெரும்பாலும் பள்ளி குழந்தைகளை அழைத்துக் கொண்டு செல்லும் பெண்கள் அடிக்கடி கீழே விழும் சூழ்நிலை காணப்படுகிறது.
தினமும் அவ்வப்போது இந்த மணல்களை அகற்ற வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் மட்டுமே சிறு சிறு விபத்துகளை தடுக்க முடியும். எனவே கோவை மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.