உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்த காட்சி.

நெல்லையில் சாலை பாதுகாப்பு மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி

Published On 2023-01-13 09:22 GMT   |   Update On 2023-01-13 09:22 GMT
  • சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நெல்லை அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் வண்ணார்பேட்டையில் இன்று மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
  • சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், மோட்டார் சைக்கிளில் செல்வோர் ெஹல்மெட், கார் ஓட்டுபவர்கள் சீட்பெல்ட் அணிந்து செல்ல வேண்டும் என்பன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நெல்லை:

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நெல்லை அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் வண்ணார்பேட்டையில் இன்று மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மேலாண்மை இயக்குனர் மோகன் தலைமை தாங்கினார். மாநகர துணை கமிஷனர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார். இதில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (போக்குவரத்து) நவாஸ்கான், நிர்வாகிகள் சுப்பிரமணி, சசிகுமார், சங்கரநாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரணி வண்ணார்பேட்டை பணிமனை முன்பிருந்து தொடங்கி மாநகர பகுதி முழுவதும் சென்றது.

இதில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், மோட்டார் சைக்கிளில் செல்வோர் ெஹல்மெட், கார் ஓட்டுபவர்கள் சீட்பெல்ட் அணிந்து செல்ல வேண்டும் என்பன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

Tags:    

Similar News