உள்ளூர் செய்திகள்

அம்மாபேட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

அம்மாபேட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2023-03-16 09:12 GMT   |   Update On 2023-03-16 09:12 GMT
  • ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
  • செல்போன் பேசியபடி வாகனங்களை இயக்குதல் தவிர்க்க பேரணியில் வலியுறுத்தப்பட்டது.

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை காவல்நிலையம், லயன்ஸ் சங்கம் மற்றும் ஜெசிஐ இணைந்து ஹெல்மெட் அணிவதன் அவசியம், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி அம்மாபேட்டையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு லயன் சங்க நிர்வாகிகள், தலைவர் முரளி, செயலாளர்வேல்மணி, பொருளாளர் ஜனார்த்தனன், மாவட்ட தலைவர் நைனா குண சேகரன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அம்மாபேட்டை காவல்உதவி ஆய்வாளர் சேகரன் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது ஹெல்மெட் அணிந்து செல்ல வலியுறுத்தியும், போதையில் பயணம் செய்தல், வாகனங்களில் அதிக சுமை ஏற்றி செல்லுதல், செல்போன் பேசியபடி வாகனங்களை இயக்குதல், ஓடும் பேருந்தில் ஏறுவதும், இறங்குவதையும் தவிர்க்க பேரணியில் வலியுறுத்தப்பட்டது.

பேரணி நால்ரோட்டில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.

நிகழ்ச்சியின் இறுதியில் அம்மாபேட்டை காவல்நிலையத்திற்கு லயன் சங்கம் சார்பில் முதல் உதவி பெட்டி வழங்கப்பட்டது. இதில் ஜெசிஐ நிர்வாகிகள் அமுதன், முத்துகுமார், பாலாஜி ஆட்சிமன்றகுழு உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News