உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி வாகைக்குளத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

Published On 2023-10-20 08:42 GMT   |   Update On 2023-10-20 08:42 GMT
  • விழிப்புணர்வு முகாமில் சுமார் 250 கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
  • வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

நெடுஞ்சாலைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் ஆறுமுக நயினார், கல்லூரி முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன், இயக்குனர் ஜார்ஜ் கிளிங்டன் ஆகியோர் தலைமை தாங்கினார்.

மேலும், புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை பற்றி புகையிலை கட்டுப்பாட்டுப் பிரிவு மாவட்ட ஆலோசகர் டாக்டர் வேணுகா எடுத்துரைத்தார்.சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமில் சுமார் 250 கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

பின்னர், வாகைக்குளம் சுங்கச்சாவடி அருகே வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.முகாமில், நெல்லை சாலை பாதுகாப்பு அலகு உதவிக் கோட்டப்பொறியாளர் சசிகலா, தூத்துக்குடி ஆர்.டி.ஓ., விநாயகம், சுகாதார பணிகள் துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், சமூக சேவகர் ரோசரி பாத்திமா, போக்குவரத்துக்கு இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள், நெடுஞ்சாலை சாலைப்பாதுகாப்பு அலகு உதவிப் பொறியாளர்கள் லட்சு மிப்பிரியா மற்றும் செல்வன், பேராசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை நெடுஞ்சாலை, உதவி பொறியாளர் ஜெயஜோதி மற்றும் கல்லூரி நிர்வாக மேலாளர் விக்னேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News