தருமபுரி பூ மார்க்கெட்டில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள பூக்களை படத்தில் காணலாம்.
தருமபுரி மாவட்டத்தில் பூக்களின் விலை உயர்வு
- பட்டன் ரோஸ் கிலோ ரூ.130, சம்பங்கி கிலோ ரூ.170 , செண்டுமல்லி கிலோ ரூ.30 ரூபாய், என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- ஆகஸ்ட் 25-ம் தேதி வரலட்சுமி நோன்பும், ஓணம் பண்டி கையும் தொடங்குவதால் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கரில் சாமந்தி, சம்பங்கி, செண்டு மல்லி, கோழிக்கொண்டை, அரளி, குண்டுமல்லி, சன்னமல்லி, ஜாதிமல்லி, உள்ளிட்ட பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
இங்கு விளையும் பூக்களை தினந்தோறும் விவசாயிகள் தருமபுரி நகர பேருந்து நிலை யத்தில் உள்ள பூ மார்க்கெ ட்டிற்கு விற்ப னைக்காக கொண்டு வருகின்றனர்.
அவ்வாறு கொண்டு வரும் பூக்களை தருமபுரி மாவட்ட சிறு வியாபாரிகள், வெளி மாநில வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின் றனர். ஆடி மாதம் முதல் திருவிழா காலம் என்பதால் பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆவணி மாத முதல் வாரத்தில் திருமண நிகழ்ச் சிகள் தொடர்ந்து நடை பெறுவதால் பூக்களின் விலை மேலும் உயர்ந்து குண்டு மல்லி கிலோ ரூ.360, சன்னமல்லி கிலோ ரூ. 300, கனகா மரம் கிலோ ரூ.500, காக்க ட்டா கிலோ ரூ.220, என விற்பனை செய்யப் பட்டது.
இன்று பூ மார்க்கெட்டில் குண்டு மல்லி கிலோ ரூ. 300 சன்னமல்லி கிலோ ரூ.280, சாமந்தி கிலோ ரூ.120, பன்னீர் ரோஸ் கிலோ ரூ.70, பட்டன் ரோஸ் கிலோ ரூ.130, சம்பங்கி கிலோ ரூ.170 , செண்டுமல்லி கிலோ ரூ.30 ரூபாய், என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி வரலட்சுமி நோன்பும், ஓணம் பண்டி கையும் தொடங்குவதால் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.