உள்ளூர் செய்திகள்
கோத்தகிரியில் தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி
- தாசில்தார் கோமதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்
- வருவாய்த்துறை, கிராம நிர்வாக அலுவலர்கள், தாசில்தார் அலுவலக ஊழியர்கள் கலந்துகொண்டனர்
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு வாரம் கடந்த 5-ந் தேதி முதல் வருகிற 12-ந் தேதிவரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதன்ஒருபகுதியாக கோத்தகிரி வருவாய்த்துறை சார்பில், தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தாசில்தார் கோமதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில்வருவாய்த்துறை, கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், தாசில்தார் அலுவலக ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.