காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடத்த கோரிக்கை
- ஒரு நாள் உண்ணா விரதப் போராட்டம் நடந்தது.
- கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஒரு நாள் உண்ணா விரதப் போராட்டம் நடந்தது.
இதற்கு மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலார் மதியழகன் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். மாநில செயலாளர் ஜெயந்தி தொடக்க உரை யாற்றினார்.
உண்ணா விரத போரா ட்டத்தில், தமிழக முதல்-அமைச்சர் தேர்தல் கால வாக்குறுதி களை நிறைவேற்ற வேண்டும். சத்துணவு ஊழி யர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
60 சதவீதத்திற்கு மேல்உள்ள காலிப்பணி யிடங்களை போர்க்கால அடிப்படை யில் நிரப்பிட வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழி யர்களைக் கொண்டு நடத்த வேண்டும்.
சத்துணவு திட்டத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும். சத்துணவு அமை ப்பாளர்களின் ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்த வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாள ருக்கு பணிக்கொடை 5 லட்சமும், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு 3 லட்சமும் வழங்கிட வேண்டும்.
பணிக்காலத்தில் இயற்கை மரணமடையும் சத்துணவு ஊழியர்களின் குடும்ப ஆண் வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் வாரிசு பணி வழங்கிட வேண்டும். பிரதி மாதம் ஏற்கனவே வழங்கியதைப் போல மாணவர்களின் உணவூட்டு செலவினம் மாதம் முதல் வாரத்தில் வழங்கிட வேண்டும்.
ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு கிடைக்கப் பெற வேண்டிய அனைத்து பலன்களும் ஓய்வு பெறும் நாளிலேயே வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.