உள்ளூர் செய்திகள்

பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கு விண்ணப்பங்கள் பெறாமல் உபகரணங்கள் வழங்க கோரிக்கை

Published On 2023-01-03 15:19 IST   |   Update On 2023-01-03 15:19:00 IST
  • குறைதீர் கூட்டத்திலேயே விண்ணப்பங்கள் இல்லாமல் உபகரணங்களை வழங்க வேண்டும்.
  • காலதாமதம் இன்றி உபகரணங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். நேற்று இந்த கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுக்க வந்த பார்வையற்ற மாற்று திறனாளிகள் கூறியதாவது:-

அரசு சார்பில் பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கு கண்ணாடிகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்க ப்படுகின்றன.ஆனால் அதற்கு விண்ணப்பம் நிரப்பி கொடுக்க வேண்டியுள்ளது. எங்களால் அதை நிரப்ப முடியாது என்பதால் மற்றவர்கள் உதவியை நாடவேண்டியுள்ளது.

மேலும் இந்த விண்ணப்பங்களை நிரப்பி தர சிலர் ரூ.20 முதல் ரூ.50 வரை கட்டணமாக வசூலிக்கின்றனர். அத்துடன் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைத்துகொடுத்து அவற்றை பரிசீலித்து பொரு ட்கள் வழங்கப்படுகின்றன.

இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே திங்கள்கிழமைகளில ்நடைபெறும் குறைதீர் கூட்டத்திலேயே விண்ணப்பங்கள் இல்லாமல் உபகரணங்களை வழங்க வேண்டும்.

இவ்வாறு பார்வையற்ற மாற்று திறனாளிகள் கூறினர்.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட பார்வையற்ற மாற்று திறனாளிகள் நலத்துறை அதிகாரி செண்பகவள்ளி கூறுகையில் விண்ண ப்பங்கள் பெறுவதன் மூலம் பயனாளிகளின் பட்டியலை பராமரிப்பது எளிதாகும்.

ஆதார் உள்ளிட்ட வைகளை பெறுவதால் பயனாளிகளை அடையாளம் காணுவதும் எளிதாகும். அவர்களுக்கு காலதாமதம் இன்றி உபகரணங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News