உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த இயற்கை விவசாயிகள்.

திருமணிமுத்தாறு, ராஜவாய்க்காலை தூர்வார கோரிக்கை

Published On 2023-02-14 15:05 IST   |   Update On 2023-02-14 15:05:00 IST
  • திருமணிமுத்தாறு ராஜ வாய்க்கால் 40 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாராத நிலையில் உள்ளது.
  • இதனை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரையை அகலப்படுத்திட வேண்டும். மேலும் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேலம்:

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தங்கராஜ் தலைமையில் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

திருமணிமுத்தாறு ராஜ வாய்க்கால் 40 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாராத நிலையில் உள்ளது. எனவே இதனை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரையை அகலப்படுத்திட வேண்டும். மேலும் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி டெல்டாவில் பருவம் மாறி வரலாறு காணாத அளவு பெருமழை பெய்து அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்கதிர்கள் முற்றிலும் அழிந்துவிட்டது.

தமிழக அரசு மூலம் ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம், உடனடியாக பேரிடர் நிவாரணம் நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவிப்பு வந்துள்ளது. செலவு அதிகரித்துள்ளதால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க தமிழக முதல்-அமைச்சர் மறுபரிசீலனை செய்து விவசாயிகளுக்கு உதவிட வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News