உள்ளூர் செய்திகள்

விருகம்பாக்கம் வேர் ஹவுஸ் மெட்ரோ ரெயில் நிலையம் என பெயர் சூட்ட வேண்டும்- முதலமைச்சருக்கு கோரிக்கை

Published On 2023-04-07 15:46 IST   |   Update On 2023-04-07 15:46:00 IST
  • உங்களில் ஒருவன் புத்தகத்தில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் விருகம்பாக்கத்தின் சிறப்புகளையும் பெருமைகளையும் தாங்கள் சுட்டிக்காட்டி உள்ளீர்கள்.
  • 1967ம் ஆண்டு விருகம்பாக்கத்தில் பேரறிஞர் அண்ணா நடத்திய கழக மாநாடு அரசியலில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி 1969-ல் கழக ஆட்சி மலர வழி வகுத்தது.

சென்னை:

விருகம்பாக்கம் முன்னாள் மாமன்ற உறுப்பினர் விருகை இளங்கோவன் தலைமையில் ஊர் பொது மக்கள், தமிழக முதலமைச்சருக்கும் மெட்ரோ ரெயில் நிலைய இயக்குனருக்கும் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

மெட்ரோ ரெயில் 2-வது வழித்தடம் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை திட்டமிடப்பட்டு பணிகள் வெகு விரைவாக நடைபெற்று வருகிறது. இதில் ஆற்காடு சாலையில் சாலிகிராமத்திற்கும், ஆழ்வார் திருநகருக்கும் இடையே உள்ள பாரம்பரியமிக்க ஊரான விருகம்பாக்கத்தில் அமையவுள்ள ரெயில் நிலையத்திற்கு விருகம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் என்று பெயர் சூட்டாமல் சாலி கிராமம் வேர் ஹவுஸ் மெட்ரோ என்று பெயர் சூட்டப்பட உள்ளதாக அறிகிறோம்.

பாரம்பரியமிக்க ஊரான விருகம்பாக்கம் பற்றி தாங்கள் எழுதிய உங்களில் ஒருவன் புத்தகத்தில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் விருகம்பாக்கத்தின் சிறப்புகளையும் பெருமைகளையும் தாங்கள் சுட்டிக்காட்டி உள்ளீர்கள். மேலும் 1967ம் ஆண்டு விருகம்பாக்கத்தில் பேரறிஞர் அண்ணா நடத்திய கழக மாநாடு அரசியலில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி 1969-ல் கழக ஆட்சி மலர வழி வகுத்தது என்பதை வரலாற்றை அறிந்தவர்கள் யாராலும் மறக்க முடியாது.

அப்பேற்பட்ட சிறப்பு மிக்க விருகம்பாக்கத்தின் பெயரை அந்த ஊரில் அமையவுள்ள மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு சூட்டாமல் இருட்டிப்பு செய்துள்ள மெட்ரோ ரெயில் நிர்வாகத்தை வலியுறுத்தி விருகம்பாக்கம் வேர் ஹவுஸ் மெட்ரோ ரெயில் நிலையம் என பெயர் சூட்ட ஆணை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

Tags:    

Similar News