உள்ளூர் செய்திகள்

 பேரிகை சாலையில் அதிகாரிகள் பேனர்களை அகற்றிய போது எடுத்த படம்.

அனுமதியின்றி வைக்கபட்ட பேனர்கள் அகற்றம்

Published On 2023-06-04 10:03 GMT   |   Update On 2023-06-04 10:03 GMT
  • 60 ஊழியர்களை கொண்டும், காவல் துறை மற்றும் வருவாய் துறையின் ஒத்துழைப்புடன் அகற்றப்பட்டது.
  • 100-க்கு மேற்பட்ட விளம்பர பேனர்கள் சாலை இருபக்கங்களிலும் வைக்கபட்டிருந்தது.

சூளகிரி.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் 161 எண்ணிக்கை, பேனர்கள் 462 எண்ணிக்கை மற்றும் போஸ்டர்கள் 435 எண்ணிக்கை ஆகியவை மாநகராட்சியின் 60 ஊழியர்களை கொண்டும், காவல் துறை மற்றும் வருவாய் துறையின் ஒத்துழைப்புடன் அகற்றப்பட்டது.

இம்மாநகராட்சியின் அனுமதி பெறப்பட்ட பின்னரே விளம்பர பலகைகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட வேண்டும் என பொதுமக்களுக்கு தெரிவித்து க்கொள்ளப்படுகிறது. தவறும்பட்சத்தில், தமிழ்நாடு உள்ளாட்சி விதிகள் 2023-ன் கீழ் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா தெரிவித்துள்ளார்.

அதேபோல் சூளகிரியில் பேரிகை, கிருஷ்ணகிரி, உத்தப்பள்ளி சாலைகளில் 100-க்கு மேற்பட்ட விளம்பர பேனர்கள் சாலை இருபக்கங்களிலும் வைக்கபட்டிருந்தது.

இது குறித்து புகார்கள் எழுந்த நிலையில் மாவட்ட ஆட்சி சரயு உத்தரவின் பேரில் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல் ரவிக்குமார், கோபாலகிருஷ்ணன் தலைமையில் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ், ஊராட்சி செயலர் வெங்கடேஷ், மற்றும் அலுவலர்கள் அனைத்து விளம்பர பேனர்களையும் அகற்றினர்.

Tags:    

Similar News