உள்ளூர் செய்திகள்

திருவந்திபுரம் தேரடி வீதியில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த பொருட்களை நெடுஞ்சாலைத்துறை, போலீசார் அகற்றிய காட்சி.

திருவந்திபுரம் தேரடி வீதியில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை போலீசார் அதிரடி நடவடிக்கை

Published On 2023-10-06 07:47 GMT   |   Update On 2023-10-06 07:47 GMT
  • சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.
  • 60 கடைகளுக்கு மேல் சாலையை ஆக்கிரமித்து பொருட்களை அடுக்கி வைத்திருந்தனர்.

கடலூர்:

கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலில் புரட்டாசி மாதம் முழுவதும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் நேரில் வந்து மொட்டை அடித்து சாமி கும்பிட்டு செல்வது வழக்கம். கடந்த இரண்டு வாரங்களாக தினந்தோறும் பக்தர்கள் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்த நிலையில் சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

இதில் மிக முக்கியமாக 3-வது சனிக்கிழமை நாளை வர உள்ளதால் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இன்று இரவு முதல் கோவிலை சுற்றி தங்கி அதிகாலையில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி நீண்ட வரிசையில் நின்று சாமி கும்பிட்டு செல்வது வழக்கம். இதன் காரணமாக அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பல்வேறு முன்னெ ச்சரிக்கை நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று மாலை தேரடி வீதியில் சுமார் 60 கடைகளுக்கு மேல் சாலையை ஆக்கிரமித்து பொருட்களை அடுக்கி வைத்திருந்தனர்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத் துறையினர், இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், திருப்பாதி ரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் திருவந்திபுரம் தேரடி வீதியில் ஆக்கிரமித்து அடுக்கி வைக்கப்ப ட்டிருந்த பொருட்களை உடனடியாக அகற்றி சீரமைத்தனர் . மேலும் பொதும க்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மீண்டும் சாலை ஆக்கிரமித்து பொரு ட்களை வைத்திருந்தால் அதனை முழுவதும் பறிமுதல் செய்து அபராதம் விதித்த கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் 3-வது வாரம் வியாழக்கிழமை என்பதால் நேற்று வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டு வந்ததோடு சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் மொட்டை அடித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தியது குறிப்பிடத்தக்கதாகும். நெடுஞ்சாலைத்துறை, இந்து சமய அறநிலை த்துறை மற்றும் போலீ சார் அதிரடியாக சாலை யில் ஆக்கிரமித்து வைத்திரு ந்ததை அகற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News