உள்ளூர் செய்திகள்

மயான பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published On 2023-09-13 09:49 GMT   |   Update On 2023-09-13 09:49 GMT
  • தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது.
  • சிமெண்டு சாலை அமைக்கக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கிராமமக்கள் அறிவித்தனர்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திரும ருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்ட ராஜபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு வயல்வெளி களுக்கு நடுவில் மயானம் உள்ளது.இந்த மயானத்திற்கு செல்ல போதிய சாலை வசதி இல்லாமல் வயல் வெளி வழியாக உடலை தூக்கிச் செல்கின்றனர்.இந்த நிலையில் மயானம் செல்வ தற்கு சிமெண்டு சாலை அமைக்க அரசு நிதி ஒதுக்கி உள்ளது.

இந்த மயானம் செல்லும் பாதை ஆக்கிரமிப்பில் இருந்த தால் சாலை அமைக்கும் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் மாவட்ட கலெக்டர், தாசில்தார் ஆகியோரிடம் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பலமுறை மனு அளித்துள்ளனர்.

ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து பொது மக்கள் ஆக்கிரமிப்பில் உள்ள மயான பாதையை மீட்டு சிமெண்டு சாலை அமைக்கக்கோரி திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் மறியல் போராட்ட த்தில் ஈடுபட உள்ளதாக கிராம மக்கள் அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் ஆக்கிரமிப்பில் இருந்த இடங்களின் ஆக்கிரமிப்பு களை திருமருகல் சரக வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி,திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி,ஊராட்சி மன்ற தலைவர் சரவணன்,கிராம நிர்வாக அலுவலர்கள் குமரேசன்,ரத்தினவேல் ஆகியோர் பொதுமக்கள் முன்னிலையில் ஆக்கிரமப்பு களை அகற்றினார்.

Tags:    

Similar News