உள்ளூர் செய்திகள்

ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட காட்சி.

தேனி-மதுரை சாலையில் ரயில்வே மேம்பால பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published On 2023-02-15 10:08 IST   |   Update On 2023-02-15 10:08:00 IST
  • தேனியில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி தற்போது நடைபெற்று வருகிறது.
  • ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது 49 வீடுகளும், 57 கடைகளும் அகற்றப்பட்டது.

தேனி:

தேனியில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த சாலையில் உள்ள தேனி பங்களாமேடு, குயவர்பாளையம் முத்து மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து அரண்மனைப்புதூர் விலக்கு வரை உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் சிந்து, தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் சீத்தராமன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

அப்போது தேசிய நெடுஞ்சாலை இளநிலை பொறியாளர் தேவநாதன், தேனி தாசில்தார் சரவணபாபு, தேனி அல்லிநகரம் நகராட்சி நகர அமைப்பு அலுவலர் திருமுருகன், நகர அமைப்பு ஆய்வாளர் கணேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது 49 வீடுகளும், 57 கடைகளும் அகற்றப்பட்டது. இதற்கான பாதுகாப்பு பணியில் தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News