உள்ளூர் செய்திகள்

டவுன் ரத வீதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றிய போது எடுத்த படம்.

டவுன் ரத வீதிகளில் அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றம்

Published On 2023-06-24 08:58 GMT   |   Update On 2023-06-24 08:58 GMT
  • தமிழகம் முழுவதும் அனுமதி இன்றி விளம்பர பதாகைகள், பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள், விளம்பர பதாகைகளை அகற்றும்படி உதவி கமிஷனர் வெங்கட் ராமன் அறிவுறுத்தினார்.

நெல்லை:

நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் அனுமதி இன்றி விளம்பர பதாகைகள், பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி வைப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 3 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கலாம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

பேனர்கள் அகற்றம்

அதன் பேரில் நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் இன்று 4 மண்டலங்களிலும் பிளக்ஸ், பேனர்களை அகற்ற அவர் உத்தரவிட்டிருந்தார்.

மாநகர பகுதியில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அந்தந்த பகுதி மண்டல அலுவலர்கள் கணக்கெடுத்து அவற்றில் உரிமம் பெறாமல் வைக்கப்பட்டவை களை அகற்றும்படி அவர் தெரிவித்திருந்தார்.அதன் பேரில் கடந்த சில வாரங்களாக மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில் பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டு வருகிறது.

டவுன் ரத வீதிகளில்...

இந்நிலையில் நெல்லை யப்பர் கோவில் தேரோட்டத்தை ஒட்டி ரத வீதிகளில் அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள், விளம்பர பதாகைகளை அகற்றும்படி உதவி கமிஷனர் வெங்கட் ராமன் அறிவுறுத்தினார்.இதையடுத்து அவற்றை அகற்றும் பணி சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் இன்று நடைபெற்றது.

டவுனில் 4 ரத வீதிகளிலும் போக்குவரத்துக்கு இடையூறாகவும், அனுமதி பெறாமலும் வைக் கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை தூய்மை இந்தியா திட்ட பரப்புரை யாளர்கள் மனோஜ், சேக், முத்துராஜ், மாரியப்பன் ஆகியோர் அகற்றி மாநகராட்சி குப்பை லாரியில் ஏற்றிச் சென்றனர்.

Tags:    

Similar News