உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் வாலிபர் கொலை உறவினர்கள் சாலை மறியல்-பதட்டம்

Published On 2023-02-03 10:03 GMT   |   Update On 2023-02-03 10:03 GMT
  • இவர் காடாம்புலியூரில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார். இரவு இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் விபத்துக்குள்ளாகி கிடந்த தாகவும், அவரை மீட்டு அழைத்து வந்தோம் எனக் கூறினர்
  • உறவினர்கள் சாலை மறியல்-பதட்டம்

கடலூர்:

பண்ருட்டி அடுத்த மேல்மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்கொழுந்து (வயது 24). இவர் காடாம்புலியூரில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார். கடந்த 29-ந் தேதியன்று இரவு இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் விபத்துக்குள்ளாகி கிடந்த தாகவும், அவரை மீட்டு அழைத்து வந்தோம் எனக் கூறி அதே ஊரைச் சேர்ந்த 2 பேர் சிவக்கொ ழுந்துவை அவரது வீட்டில் விட்டுச் சென்றனர்        

    இதையடுத்து பலத்த காயங்களுடன் இருந்த சிவக்கொழுந்தை பெற்றோர்கள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனு மதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து போனார். சிவக்கொழுந்து சாலை விபத்துக்குள்ளாகவில்லை, கொலை செய்யப்பட்டுள் ளார் என அவரது பெற்றோர் மற்றும் உறவி னர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். மேலும், இது குறித்து விசாரித்து கொலையாளிகளை கைது செய்தால் தான் உடலை வாங்குவோம் என்று கூறி மறியலில் ஈடுபட்டனர்   இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பண்ருட்டி உதவி போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா பேச்சுவார்த்தை நடத்தி னார். சிவக்கொழுந்து கொலை செய்யப்பட்டிருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி யளித்தார். இதையடுத்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதா மரைப்பாண்டியன் தலை மையிலான போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர். இதில் சம்பவத்தன்று சிவக்கொ ழுந்துவை வீட்டில் விட்டுச் சென்ற 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர்  விசாரணையில் 2 பேரும் அதே ஊரைச் சேர்ந்த கார்மேகம், அபினேஷ் என்பதும் கடந்த 29-ந் தேதி இரவு சிவக்கொழுந்துவுடன் அமர்ந்து மது அருந்தி யுள்ளனர். அப்போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில்ஆத்திரமடைந்த கார்மேகம், அபினேஷ் 2 பேரும் சேர்ந்து சிவக்கொழுந்தை தாக்கியுள்ளனர். இதில் சிவக்கொழுந்து தப்பியோட முயற்சித்துளளார். இருந்தபோதும் அவரை விரட்டிச் சென்று அடித்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே சிவக்கொழுந்து மயங்கி விழுந்துள்ளார். இதனால் செய்வதறியாது 2 பேரும் திகைத்தனர். மேலும், சாலையில் அடிபட்டு கிடந்தார் என்று கூறி வீட்டில் விட்டு விட திட்டம் போட்டு சிவக்ெகாழுந்துவை வீட்டில் விட்டு சென்றுள்ளனர் என்ற போலீசாருக்கு தெரிய வந்தது  இதையடுத்து 2 பேரையும் கைது செய்த காடாம்புலியூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News