உள்ளூர் செய்திகள்

கோவையில் 9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய உறவினர் கைது

Published On 2022-07-27 15:09 IST   |   Update On 2022-07-27 15:09:00 IST
  • வீட்டுக்கு வந்து சிறுமியை அழைத்து கொண்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதனை செய்தனர்.
  • தொண்டாமுத்தூர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறுமியின் உறவினரை கைது செய்தனர்.

கோவை:

நெல்லையை சேர்ந்த வியாபாரி தனது குடும்பத்துடன் கடந்த 11 மாதத்துக்கு முன்பு கோவை வந்தார். இவர் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் தங்கி மளிகை கடை நடத்தி வருகிறார்.

இவரது மகள் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் 26 வயது உறவினர் இவர்களுடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தொடர்ந்து வாந்தி எடுத்து சோர்வாக இருந்தார்.இதனை பார்த்த சிறுமியின் உறவினர், தாயாரிடம் இதுகுறித்து தெரிவித்தார். உடனே அவர் வீட்டுக்கு வந்து சிறுமியை அழைத்து கொண்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதனை செய்தனர்.

அப்போது சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியின் உறவினர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து தொண்டாமுத்தூர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறுமியின் உறவினரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகினறனர்.

Tags:    

Similar News