உள்ளூர் செய்திகள்

பேரண்டப்பள்ளி ஊராட்சியில் உள்ள நடுநிலைபள்ளியில் காலை சிற்றுண்டி உணவை பி.டி.ஒ. விமல் குமார் ருசித்து பார்த்தபோது எடுத்த படம்

சூளகிரியில் அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்க ஒத்திகை

Published On 2023-08-22 15:40 IST   |   Update On 2023-08-22 15:40:00 IST
  • 133 அரசு ஆரம்பள்ளிகளில் மிக சிறந்த முறையில் காலை உணவு 7975 மாண வர்களுக்கு வழங்கபட உள்ளது.
  • ஆசிரியர்கள் சமைத்த உணவுகளை சுவைத்து பார்த்தனர்.

சூளகிரி,

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகளில் உள்ள 133 அரசு ஆரம்பள்ளிகளில் மிக சிறந்த முறையில் காலை உணவு 7975 மாணவர்களுக்கு வழங்கபட உள்ளது.

காலை உணவு திட்டத் தின் கீழ் சூளகிரியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கும் வருகிற 25-ந் தேதி முதல் காலை உணவு வழங்கபட உள்ளது.

இதற்காக மாவட்ட கலெக்டர் சரயு உத்தரவின் பேரில் கூடுதல் கலெக்டர் வந்தனா கார்கே மேற்பார் வையில், சூளகிரி ஒன்றியத்தில் 42 ஊராட்சியில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் ஒத்திக்கைக்காக காலை உணவு சமைக்கப்பட்டது.

இதில் பேரண்டப்பள்ளி ஊராட்சி கொத்தூர் கிராமத்தில் உள்ள நடநிலைப் பள்ளியில் காலை உணவு சமைத்ததை பி.டி. ஒ. விமல் ரவிக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளாகிருஷ்ணப்பா, செயலர் செல்வராஜ், சத்துணவு அமைப்பாளர் மணி, மகளிர் திட்ட மேற்பார்வையாளர் எல்லப்பா, எஸ்.எம்.சி நிர்வாகிகள், ஆசிரியர்கள் சமைத்த உணவுகளை சுவைத்து பார்த்தனர்.

இதேபோல பலபகுதியில் உள்ள பள்ளிகளில் வட்டார கல்வி அலுவலர்கள் வெங்கட்குமார், மாதேஷ், ஜார்ஜ், இந்திரா மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஆசிரியர்கள், செயலர்கள் அந்தந்த பகுதியில் உள்ள பள்ளி களில் உணவைருசித்து பார்த்து ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News