உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் சமரச விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தஞ்சையில், சமரச விழிப்புணர்வு பேரணி

Published On 2023-04-12 11:24 GMT   |   Update On 2023-04-12 11:24 GMT
  • விரைவில் தீர்வு வேண்டுமா சமரச மையத்திற்கு வாருங்கள்.
  • வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

தஞ்சாவூர்:

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி சமரச நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை வரை இந்த விழா கொண்டாடப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு சமரச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை தஞ்சாவூர் மாவட்ட சமரச மையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜெசிந்தா மார்ட்டின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்தப் பேரணியில் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விரைவில் தீர்வு வேண்டுமா சமரச மையத்திற்கு வாருங்கள், என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை எழுதியபடி பேரணியாக சென்றனர். பேரணியானது ஐ.டி.ஐ மைதானத்தில் முடிவடைந்தது.

முன்னதாக சமரச மையத்தில் நேரடியாக சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபடுவது குறித்தும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச மையத்திற்கு அனுப்புவது தொடர்பாகவும் இதன் மூலம் உகந்த தீர்வுகளை எட்டுவது குறித்தும் சமரச மையத்தால் நேரடி பேச்சு வார்த்தைகளில் மனித உறவுகளையும் சமூக உறவுகளையும் மேம்படுத்துவது குறித்தும் சமரச மையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜெசிந்தா மார்ட்டின் விளக்கமாக எடுத்துக் கூறினார்.

மேலும் இது தொடர்பாக வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமரச மையத்தின் மாவட்ட தலைவர் இந்திராணி, ஒருங்கிணைப்பாளர் தங்கமணி, முன்னாள் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜீவக்குமார், வழக்கறிஞரும் மீடியேட்டருமான ராஜேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாவட்ட சமரச மையத்தின் நோடல் ஆபிசர் ஆரோக்கிய ராஜ் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News