ரேசன் கடை பெண் ஊழியர் சஸ்பெண்டு
- புலிக்குத்தி தெரு வில் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைக்கு சொந்தமான ரேசன் கடை உள்ளது.
- கண்ணன் என்பவருக்கு ரேசன் கார்டு இல்லாமல் 50 கிலோ அரிசியை முறைகேடாக விற்றதாக புகார் எழுந்தது.
ேசலம்:
சேலம் ஜவுளி கடை பஸ் நிறுத்தம் புலிக்குத்தி தெரு வில் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைக்கு சொந்தமான ரேசன் கடை உள்ளது.
இங்கு கஸ்தூரி என்ற பெண், விற்பனையாளராக உள்ளார். இவர் கடந்த 4-ந்தேதி சேலம் குகையை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு ரேசன் கார்டு இல்லாமல் 50 கிலோ அரிசியை முறைகேடாக விற்றதாக புகார் எழுந்தது. இது பற்றி தகவல் அறிந்த சேலம் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் , கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கஸ்தூரியை சஸ்பெண்டு செய்து மண்டல இணைப்ப திவாளர் ரவிக்குமார் நேற்று உத்தரவிட்டார். மேலும் அந்த உத்தரவில், எந்த வித முன்னறிவிப்பு இன்றி தலைமையிடத்தை விட்டு விற்பனையாளர் வெளியே செல்லக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் அவருக்கு பதில் புலிக்குத்தி தெருவில் உள்ள ரேசன் கடைக்கு மற்றொரு ரேசன் கடை விற்பனையாளர் மோக னம்மாள் என்பவர் நிய மிக்கப்பட்டு கூடுதல் பொ றுப்பு வழங்கப்பட்டுள்ளது.