உள்ளூர் செய்திகள்

தென்திருப்பதி ஸ்ரீவாரி மலையப்பர் கோவிலில் ரதசப்தமி விழா

Published On 2023-01-29 09:21 GMT   |   Update On 2023-01-29 09:21 GMT
  • திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
  • கோவிந்தா கோஷங்களை எழுப்பி தரிசனம் செய்தனர்.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பா–ளையத்தில் தென்திருப்பதி ஸ்ரீ வாரி மலையப்பர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் ரதசப்தமியை முன்னிட்டு பெருமாள் திருவீதி உலா வைபவம் மற்றும் சூரிய ஜெயந்தி விழா நடைப்பெற்றது.

ரதசப்தமியையொட்டி நடந்த இந்த நிகழ்ச்சியில் காலை சிறப்பு யாகம் நடத்தப்பட்டு சூரிய பிரபை புறப்பாடு நடத்தபட்டு சூரியனுக்கு விசேஷ ஆர்த்தி நடைபெற்றது. தொடர்ந்து மலையப்ப சாமி சேஷ வாகனம், அன்னபட்சி வாகனம், அனுமந்த வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

முன் மண்டபத்தில் இருந்து மலையப்ப சுவாமி அலங்கரிக்கப்பட்ட ஒவ்வொரு வாகன–ங்களிலும் எழுந்தருளி 4 ரத வீதிகளின் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது பக்தர்கள் பேரிட்சை, அவல், பழங்கள் போன்றவற்றை தீபத்துடன் தட்டில் எடுத்து சாமிக்கு காணிக்கையாக அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோஷங்களை எழுப்பி மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை அன்னூர் கே.கோவிந்தசாமி நாயுடு, கே.ஜி டெனீ்ம் மற்றும் ஸ்ரீ கண்ணபிரான் மில்ஸ் குடும்பத்தார் செய்திருந்தனர்.

Tags:    

Similar News