உள்ளூர் செய்திகள்
தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்
- குடிநீர் குழாய் சரி செய்யும் பணி நடைபெற்றது
- பொதுமக்கள் கடும் அவதி
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் காரை கூட் ரோடு பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அனைத்து வாகனங்களும் அருகில் அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் சாலைகள் வழியாக சென்று வருகின்றன.
இந்த நிலையில் நேற்று சிப்காட் நோக்கி செல்லும் சர்வீஸ் சாலையில் நகராட்சி சார்பில் பழுதடைந்திருந்த குடிநீர் குழாய் சரி செய்யும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்றது.
இதனால் இரு புறங்களிலும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு , ஒரே சாலையில் எதிரெதிர் திசையில் மாற்றி விடப்பட்டன.
இருபுறங்களிலும் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி, அலுவலகம், தொழிற்சாலைகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.