உள்ளூர் செய்திகள்
மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
- சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை,
வாலாஜா அடுத்த பாலாறு அணைக்கட்டு இலங்கை தமிழர்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(50) கூலித்தொழிலாளி.
இவர் நேற்று ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தடுமாறி மரத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த பன்னீர் செல்வத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்கை பலனின்றி பன்னீர்செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்