உள்ளூர் செய்திகள்
- மாட்டின் அலறல் சத்தம் கேட்டு வந்தனர்
- 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்டனர்
ராணிப்பேட்டை:
வாலாஜா ஜங்கமர் தெருவில் உள்ள காலி மனையில் தண்ணீர் வற்றிய நிலையில் பாழடைந்த கிணறு உள்ளது.
இந்த நிலையில் நேற்று அப் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு ஒன்று தவறி கிணற்றில் விழுந்தது. இதனால் மாட்டின் அலரல் சத்தம் கேட்டது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் கிணற்றில் விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.