உள்ளூர் செய்திகள்

கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

கிராமங்களை தன்னிறைவு பெற்றவையாக மாற்ற அதிகாரிகள் முழு ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும்

Published On 2023-07-24 15:30 IST   |   Update On 2023-07-24 15:30:00 IST
  • நிலுவையிலுள்ள பணிகளுக்கான காரணங்களையும் கேட்டறிந்து விரைவாக முடிக்க வேண்டும்
  • கலெக்டர் வளர்மதி உத்தரவு

ராணிப்பேட்டை:

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் 5 ஆண்டுகளில் தேவையான அனைத்து அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் உள்ள 288 கிராம ஊராட்சிகளில் 2021-2022 ம் நிதி ஆண்டில் 60 கிராம ஊராட்சிகளும் மற்ற 4 நிதி ஆண்டுகளுக்கும் தலா 57 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 2021-2022 ஆண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள 60 கிராம ஊராட்சிகள் மற்றும் 2022-2023 ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள 57 கிராம ஊராட்சிகளிலும் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கோள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஆய்வு கூட்டம் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி கூறியதாவது:-

ஆய்வு செய்து, நிலுவையிலுள்ள பணிகளுக்கான காரணங்களையும் கேட்டறிந்து பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

கிராமங்களை தன்னிறைவு பெற்ற கிராமமாக உருவாக்க அனைத்துத் துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குநர் லோகநாயகி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News