உள்ளூர் செய்திகள்

ஆற்காடு அருகே தீப்பற்றி எரிந்த புளிய மரத்தை கிராம நிர்வாக அலுவலர் நேரில் ஆய்வு செய்த காட்சி.

ஆற்காடு அருகே தீப்பற்றி எரிந்த புளிய மரம்

Published On 2022-09-10 15:02 IST   |   Update On 2022-09-10 15:02:00 IST
  • கிராம நிர்வாக அலுவலர் நேரில் ஆய்வு
  • தீயணைப்புத்துறையினர்அரை மணி நேரம் போராடி அனைத்தனர்


ஆற்காடு:

ஆற்காடு கலவை ரோட்டில் உள்ள அரசினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதி வளாகத்தில் சிலர் தீ வைத்ததால் அங்கே உள்ள புளியமரம் தீப்பற்றி எரிந்தது.

அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் சக்கரவர்த்தி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு உடனே ஆற்காடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தீயணைப்பு நிலைய அலுவலர் பரிமளா தேவி தலைமையில் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து அரை மணி நேரம் போராடி அனைத்தனர்.

வருவாய் ஆய்வாளர் பாரதி, கிராம நிர்வாக அலுவலர் சக்கரவர்த்தி, கிராம நிர்வாக உதவியாளர் ராஜசேகர் தீயணைப்பு துறை வீரர்கள் ஆகியோர் உட்பட இருந்தார்.

Tags:    

Similar News