உள்ளூர் செய்திகள்

12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் உயர்கல்வி வழிகாட்டலுக்கான களபயணம் குறித்த ஆய்வு கூட்டம்

Published On 2023-02-23 10:01 GMT   |   Update On 2023-02-23 10:01 GMT
  • நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடந்தது
  • ஏராளமானேர் கலந்து கொண்டனர்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி தலைமையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ / மாணவிகளை அருகாமையில் இருக்கின்ற கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்று உயர்கல்வி வழிகாட்டலுக்கான கல்லூரி களப்பயணம் முன்னேற்பாடு குறித்து ஆய்வுக் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்த கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறையின் மூலம் நான் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 66 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ம் வகுப்பு படிக்கும் 508 மாணவ மாணவிகளை உயர்கல்வி பயில ஆர்வமூட்டும் விதமாக அருகில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகளை அழைத்துச் சென்று உயர்கல்வி வழிகாட்டலுக்கான கல்லூரி களப்பயணம் முன்னேற்பாடு குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், 12ம் வகுப்பு பயிலும் 508 மாணவ, மாணவிகளை நாளை (வெள்ளிக்கிழமை) கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டது. மேலும், அன்றைய தினத்தில் மாணவர்களை கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்ல பஸ் வசதியும், உணவு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு உயர்கல்வி படிக்க ஆர்வமூட்டப்பட்டு உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, போக்குவரத்து துறை அலுவலர், அரசு கலைக் கல்லூரி முதல்வர்கள், அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வர், மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி), மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மற்றும் கல்லூரி நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News