உள்ளூர் செய்திகள்
வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் கார்த்திகை மாத ஏகாதசி சிறப்பு பூஜை
- பக்தர்களுக்கு பகவத் கீதை வழங்கப்பட்டது
- பெருமாளுக்கு சிறப்பு தைலாபிஷேகம் நடந்தது
வாலாஜா:
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி நேற்று கார்த்திகை மாத ஏகாதசி முன்னிட்டு மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும், சிறப்பு தைலாபிஷேகமும் நடைபெற்றது.
கீதா ஜெயந்தியை முன்னிட்டு பக்தர்களுக்கு பகவத் கீதை புத்தகம் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் சென்னையை சேர்ந்த டாக்டர்.ரங்கராஜன் கலந்து கொண்டு, பீடாதிபதி. டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் முன்னிலையில் பக்தர்களுக்கு பகவத் கீதை புத்தகங்களை வழங்கினார்.