உள்ளூர் செய்திகள்
காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்
- கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்தது
- பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
பேரூராட்சி தலைவர் லதா நரசிம்மன் முகாமை தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி துணைத்தலைவர் தீபிகா முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்டோருக்கு பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், எலும்பு மருத்துவம் சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் பேரூராட்சி உறுப்பினர்கள், டாக்டர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.