உள்ளூர் செய்திகள்

நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2022-08-08 09:31 GMT   |   Update On 2022-08-08 09:31 GMT
  • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்
  • வங்கியில் கடன் உதவி பெறுவதற்கான ஆணையை வழங்கினார்

அரக்கோணம்

அரக்கோணம் அடுத்த செம்பேடு ஊராட்சி குருராஜப்பேட்டையில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு விற்பனையாளர் சங்கம் சார்பில் 8-வது தேசிய கைத்தறி தின விழாவை முன்னிட்டு நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

முகாமை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து நெசவாளர்கள் 16 பேருக்கு தல ரூ.50,000 விதம் வங்கியில் கடன் உதவி பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அரக்கோணம் ஒன்றிய குழு தலைவர் நிர்மலா சவுந்தரராஜன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அம்பிகா பிரபு ,அரக்கோணம் மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் சவுந்தரராஜன், கூட்டுறவு சங்க தலைவர் கீதா தமிழ்மணி, துணி நூல் கட்டுப்பாட்டு அலுவலர் அகமது பாஷா ,துணை ஆய்வாளர் செல்வகணேஷ் பாண்டியன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

1974-ம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தன்று ஏற்றப்பட்ட தேசிய கொடியை இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருவதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் நெசவாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தினர் காண்பித்து அது குறித்து விவரங்களை எடுத்துரைத்தனர்.

Tags:    

Similar News