உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

ராணிப்பேட்டையில் வேளாண்மை துறை சார்பில் 35 கிராமங்களில் சிறப்பு முகாம்

Published On 2022-06-06 15:22 IST   |   Update On 2022-06-06 15:24:00 IST
  • பல்வேறு துறை அதிகரிகள் பங்கேற்பு
  • முகாமில் பல திட்டங்கள் குறித்து ஆலோசனை

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேளாண்மை துறை சார்பில் 2021-2022ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் நாளை (செவ்வாய்கிழமை) 35 கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

முகாமில் வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சித் துறை, தோட்டக்கலை துறை, மீன்வளத் துறை, கால்நடைத் துறை, பொதுப் பணித்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை, வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் முகாமில் பட்டா மாற்றம், விவசாய கடன் அட்டை வழங்குதல், பயிர் கடன் வழங்குதல் மற்றும் பல்வேறு துறைகள் மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும்.

அரக்கோணம் தாலுகாவில் தணிகை போளூர், வடமாம்பாக்கம், இச்சிபுத்தூர், பாராஞ்சி, செம்பேடு, கைனூர் ஆகிய இடங்களிலும், ஆற்காடு தாலுகாவில் தாஜ்புரா, மாங்காடு, மேலகுப்பம், ஆயிலம், கன்னிகாபுரம் ஆகிய கிராமங்களிலும், காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் பாணாவரம், கோடம்பாக்கம், புதுப்பட்டு, கர்ணாவூர் ஆகிய பகுதிகளிலும், நெமிலி தாலுகாவில் காட்டுப்பாக்கம், சித்தேரி, அரிகிலப்பாடி, நெல்வாய், சயினாபுரம் ஆகிய கிராமங்களிலும், சோளிங்கர் தாலுகாவில் ஐப்பேடு, பாண்டியநல்லூர், ஜம்புகுளம், கொடைக்கல் மற்றும் திமிரி வட்டாரத்தில் வேம்பி, சென்னசமுத்திரம், வளையாத்தூர், வரகூர், புங்கனூர், காவனூர், துர்கம் மற்றும் வாலாஜா தாலுக்காவில் நவ்லாக், நரசிங்கபுரம், அனந்தலை ஆகிய கிராமங்களில் முகாம் நடக்கிறது.

இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News