உள்ளூர் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்
- வருகிற 21-ந்தேதி நடக்கிறது
- விண்ணப்பதாரர்களை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்ய உள்ளனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர்.
இந்த மாற்றுத்திறனாளிகளின் வயதினை தளர்வு செய்து மாதாந்திர உதவித்தொகை வழங்கும் பொருட்டு வருகிற 21-ந் தேதி காலை 10.30 மணியளவில் சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.
இந்த சிறப்பு முகாமில் கலெக்டர் தலைமையில்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மருத்துவ அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோர் உறுப்பினர்களாக அடங்கிய குழுவினர் விண்ணப்பதாரர்களை நேரடியாக ஆய்வு செய்ய உள்ளனர்.
எனவே விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் முகாமில் பங்கேற்று பயன் பெற வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.