உள்ளூர் செய்திகள்

வாலாஜா தன்வந்திரி பீடத்தில் முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2023-01-18 14:48 IST   |   Update On 2023-01-18 14:48:00 IST
  • சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு நடந்தது
  • ஏராளமானோர் தரிசனம்

வாலாஜா:

வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு தன்வந்திரிஆரோக்ய பீடத்தில் உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் 4 இன்ச் உயரத்தில் தங்கத்தினால் ஆன சொர்ண (தங்க) சனீஸ்வரராக 20 அடி அகலம், 27அடி நீளத்தில், 10 அடி ஆழ பாதாளத்தில் ஸ்ரீ பாதாள சொர்ண (தங்க) சனீஸ்வரராகவும், ஒன்றரை அடி உயரத்தில் நீலா தேவியுடன், கையில் ஊன்று கோலுடன் ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரராகவும் தனித்தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள் புரிந்து வரும் சனீஸ்வரர்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.

முன்னதாக சனிப்பெயர்ச்சி மஹா யாகமும் நடைபெற்றது.யாகத்தில் பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சனிப்பெயர்ச்சி மஹா யாகத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஸ்ரீ தன்வந்திரி டாலர் மற்றும் அருட் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக உழவர் திருநாளான நேற்று ஸ்வாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர். மேலும் இன்று ஸ்ரீ லஷ்மி குபேரர் யாகம் பூர்த்தி விழா, வருகிற 23-ந் தேதி 41அடி உயர சக்கரத்தாழ்வார் ஸ்தூபி பூமி பூஜை விழா, 27-ந்தேதி 21 அடி உயர விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடர் பகவானுக்கு முதலாமாண்டு வருஷாபிஷேக விழா, 28-ந் தேதி ரத சப்தமியை முன்னிட்டு 7 குதிரைகள் கொண்டு அஸ்வமேத பூஜை விழா, 29-ந் தேதி லக்ஷ அஸ்வாரூடா ஜப ஹோமம், மஹா பூர்ணாஹூதி விழா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News