பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை
- பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார்
- வாலிபர் கைது
நெமிலி:
ராணிப்பே ட்டை மாவட்டம் காவேரிப்பா க்கம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 2 சிறுவர்கள் அதே பகுதியில் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
பாலியல் தொல்லை
இவர்கள் நேற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தனர் அவர்களது பெற்றோர் கேட்டபோது எங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளனர்.
மாணவர்களும் சோர்வாக காணப்பட்டதால் அவர்களிடம் மீண்டும் விசாரித்தனர், அப்போது அழுது கொண்டே அதே பகுதியை சேர்ந்த வாலிபர் பாலியல்தொல்லை கொடுத்ததாக தெரிவித்தனர்.
இவர்கள் இயற்கை உபாதை கழிக்க செல்லும் பொழுதும் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு வீட்டுக்கு ஓட்டு வரும் பொழுதும் மறைவான இடத்திற்கு கூட்டிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதனால் சிறுவர்களின் பெற்றோர் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதே பகுதியை சேர்ந்த நரேஷ் குமார் (வயது 23) என்பவரை கைது செய்தனர்.
அவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.