பக்தர்களுக்கு சமய நூல்கள் வழங்கப்பட்ட காட்சி.
சமத்துவ பொங்கலுடன் சமய நூல் வழங்கும் விழா
- தன்வந்திரி பீடத்தில் நடந்தது
- நாளை சனிப்பெயர்ச்சி மகா யாகம் நடக்கிறது
வாலாஜா:
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 18-வது ஆண்டாக சமத்துவ பொங்கலுடன் சமய நூல் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவை ஒட்டி 16 புதுப்பானைகளில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.பின்னர் ஸ்வாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்களுக்கு பகவத் கீதை உள்பட சமய நூல்களுடன், பொங்கல் பிரசாதமும், ஆசிகளையும் பீடாதிபதி டாக்டர். ஸ்ரீ முரளிதர சுவாமிகள் வழங்கினார்.
மேலும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ அஷ்டகால மகா பைரவர், ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர்க்கு சிறப்பு ஹோமம், அபிஷேகமும், ஸ்ரீ அஷ்ட கால மகா பைரவருக்கு வடை மாலை சாற்றியும் பூஜைகள் நடைபெற்றது.ஸ்ரீ லஷ்மி குபேர ஹோமத்துடன், கணபதி, காயத்ரி ஹோமங்க ளும் நடைபெற்றது.
சனிப்பெயர்ச்சி திருக்கணிதப்படி ஜனவரி 17-ந்தேதி நாளை சனிப்பெ யர்ச்சி நடைபெறுகிறது.
இந்த பெயர்ச்சியில் சனி பகவான் மகர ராசியிலிருந்து, கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.சனிப்பெ யர்ச்சியில், சனி பகவான் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி ஆகியவையாக வரும் காலங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எனவே பக்தர்கள் ஏழரை சனி, விரையசனி, ஜென்மசனி, பாதசனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி போன்ற தோஷங்கள் அகலவும், சனிதிசை மற்றும் சனி புக்தி நடைபெறும் போது தோஷ நிவர்த்தி பரிகாரங்கள் செய்து கொள்வதும் அவசியம் ஆகும்.தற்போதைய சனிப்பெயர்ச்சியை ஒட்டி ரிஷபம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களும், சனி திசை மற்றும் சனி புக்தி நடப்பவர்களும் பரிகாரங்கள் செய்து கொள்வது அவசியம் ஆகிறது.தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் 4 இன்ச் உயரத்தில் தங்கத்தினால் ஆன சொர்ண (தங்க) சனீஸ்வரராக காட்சி தருகிறார்.
நாளை சனிப்பெயர்ச்சி யொட்டி மாலை 6 மணி முதல் 8 மணிக்குள் சனிப்பெயர்ச்சி மஹா யாகமும், சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடைபெறுகிறது.பக்தர்கள் இந்த யாகம், அபிஷேக, பூஜைகளில் பங்கேற்று சங்கல்பம் செய்து கொண்டு பயன் பெறலாம்.
சனிப்பெயர்ச்சி மஹா யாகத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ஸ்ரீ தன்வந்திரி டாலர் மற்றும் அருட் பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் மேலும் அன்றே உழவர் திருநாள் என்பதால் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளதாக தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதர சுவாமிகள் தெரிவித்துள்ளார்.