உள்ளூர் செய்திகள்

வேலூர் மெயின் ரோட்டில் சீரமைக்கப்பட்ட சிறு பாலம்

Published On 2022-08-30 15:05 IST   |   Update On 2022-08-30 15:05:00 IST
  • ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
  • நகராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்

ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள வேலூர் மெயின் ரோடு அண்ணா சிலை அருகே 25 ஆண்டுகளுக்கு முன் சிறுபாலம் கட்டப்பட்டது.

ஆற்காடு நகரின் பிரதான பகுதியில் அமைந்துள்ள. இந்த பாலத்தில் கழிவுநீர் செல்லாமல் அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவு நீர் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் பார்வையிட்டு இரண்டே நாளில் பாலம் சீரமைக்கப்பட்டது. அதனை ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. போக்குவரத்து பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இதில் நகரமன்ற துணைத் தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன், நகர தி.மு.க. செயலாளர் ஏ.வி.சரவணன், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் பொன்.ராஜசேகர், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பென்ஸ் பாண்டியன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி சுகாதார ஆய்வாளர், நகராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News