உள்ளூர் செய்திகள்

கடல்போல காட்சியளிக்கும் வாலாஜா பாலாறு அணைக்கட்டு.

பாலாறு அணைக்கட்டில் இருந்து கால்வாய்களில் தண்ணீர் திறப்பு

Published On 2023-09-29 14:22 IST   |   Update On 2023-09-29 14:22:00 IST
  • வினாடிக்கு 1350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
  • நீர்வரத்து அதிகரித்ததால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக வாலாஜா அருகே உள்ள பாலாறு அணைக்கட்டு தடுப்ப ணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதனால் பாலாறு அணைக்கட்டில் நீர் தேங்கி பரந்து விரிந்து கடல் போல்காட்சி அளிக்கிறது.

நீர் வரத்து அதிக ரித்துள்ளதை தொடர்ந்து பாலாறு அணைக்கட்டு தடுப்பணையிலிருந்து பாசன கால்வாய்கள் மூலம் வினாடிக்கு 1350 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன்படி காவேரிப்பாக்கம் பெரிய ஏரிக்கு 280 கன அடி, மகேந்திரவாடி ஏரிக்கு 268 கன அடி, சக்கரமல்லூர் ஏரிக்கு 110 கன அடி, தூசி ஏரிக்கு 692 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News