உள்ளூர் செய்திகள்

அடகு கடையில் தொழிலாளியை கட்டையால் தாக்கி பணம், செல்போன் பறிப்பு

Published On 2022-07-17 14:26 IST   |   Update On 2022-07-17 14:26:00 IST
  • போலீசார் விசாரணை
  • இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட பொதுமக்கள் வலியுறுத்தல்

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம், தெருவை சேர்ந்தவர் மகன் சின்ராஜ் (வயது 52). இவர் பனப் பாக்கத்தில் உள்ள அடகு கடையில் கடந்த 15 வருடங்களாக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு காவேரிப்பாக்கம் நோக்கி சென்றுள்ளார். அப்போது மேலபுலம் கிராமம் அருகே செல்லும் போது அவரின் பின்னால் பைக்கில் வந்த மர்ம கும்பல் 3 பேர் சின்ராஜை மடக்கி கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர்.

காயமடைந்த அவரிடம் இருந்து 10 ஆயிரம் பணத்தையும், செல்போனையும் பறித்து சென்றுள்ளனர். இது குறித்து சின்ராஜ் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

தொடர் வழிபறி

கடந்த சில மாதங்களாக பனப்பாக்கம், நெமிலி, ஓச்சேரி, ஆயர்பாடி, காவேரிப்பாக்கம், அவளூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் வழிப் பறி, பைக் திருட்டு போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனால் இரவு நேரத்தில் வேலை முடித்துவிட்டு அந்த வழியக வரும் தொழிலாளர்கள் ஒருவித அச்சத்துடனே கடந்து வருகின்றனர். உடனடியாக இரவு நேரங்களில் போலீசார் இந்த பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News