உள்ளூர் செய்திகள்

அ,ம.மு.க. மண்டல பொறுப்பாளர் என்.ஜி.பார்த்திபன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.

ஒ.பி.எஸ். அணி-அ.ம.மு.க. ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-02 13:59 IST   |   Update On 2023-08-02 13:59:00 IST
  • ஏராளமானோர் பங்கேற்பு
  • பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டையில், முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா வசித்த கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை மற்றும் மர்ம நிகழ்வுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர தி.மு.க அரசை வலியுறுத்தி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் முரளி தலைமை தாங்கினார். அ.ம.மு.க.நகர செயலாளர் தனசேகர் வரவேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் அ.ம.மு.க மண்டல பொறுப்பாளரும், மாவட்ட செயலாளருமான என்.ஜி.பார்த்திபன் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கொடநாட்டில் கொலை,கொள்ளை மற்றும் மர்ம நிகழ்வுகள் குறித்து உரிய விசாரணை

நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வலியுறுத்தி கோஷம் போட்டனர்.

மாவட்ட அவை த்தலைவர் பொ ற்கோ,மாவட்ட பொருளாளர் குத்புதீன், அ.ம.மு.க மாவட்ட அவைத்தலை வர் பாண்டு ரங்கன், மா வட்ட பொருளாளர் மூர்த்தி , பேரூராட்சி மன்ற உறுப்பினர் சுரேஷ் உள்பட அ.திமு.க.(ஓ.பி.எஸ்.அணி) மற்றும் அ.ம.மு.க . நிர்வாகிகள் , தொண்டர்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

முடிவில் நகர செயலாளர் நித்யா நன்றி கூறினார்.

Tags:    

Similar News