காவேரிப்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்ட காட்சி.
காவேரிப்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு
- முழுகொள்ளளவை எட்டியது
- 75 சதவீத ஏரிகள் நீராதாரத்தைப் பெறும்
ராணிப்பேட்டை:
தமிழகத்தின் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட திருவள்ளூர் மாவட்டம் செம்ப ரம்பாக்கம் ஏரி, செங் கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரியை அடுத்து 3 - ஆவது பெரிய ஏரி ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஏரியாகும்.
இந்த ஏரியின் மொத்தப் பரப்ப ளவு 3,968 ஏக்கர். பருவமழைகாலங் களில் இந்த ஏரி முழுக் கொள்ள ளவை எட்டினால், முப்போகம் பயிர் சாகுபடி செய்யலாம். இந்த ஏரியின் முழுக் கொள் ளளவு 30.65 அடி.
சமீபத்தில் பெய்த பரவளான மழை, பாலாற்று வெள்ளத்தால் ஏரியின் பாதுகாப்பு அளவான 29.1 அடியை நேற்று காலை எட்டியது.
அதாவது மொத்த நீர் கொள்ளள வான 1,474 கன அடியில் 1218 கன அடியை எட்டியது . இதைத் தொடர்ந்து, ஏரியின் பாதுகாப்பு கருதி நரி மதகு, சிங்கமதகு, மூல மதகு, பள்ள மதகு உள்ளிட்ட மொத்தம் உள்ள 26 மதகு களில் இருக்கும் 56 கண்களில் 30 மதகுகளை பொதுப்பணித்துறையினர் காலை திறந்து விட்டனர். இவற்றில், விநாடிக்கு 93 கன அடி நீர் ஏரியில் இருந்து வெளியேறுகி றது. தற்போது ஏரிக்கு நீர்வரத்து 42கன அடியாக உள்ளது.
இந்த ஏரியின் நீர் வெளியேறி மகேந்திர வாடி ஏரி, பெருவளையம், சிறுவளையம், தர்மநீதி, துறையூர், ரெட்டிவலம், தென்மாம்பாக்கம், வேட்டாங்குளம் , புன்னை ஆகிய ஏரிகளை அடைய உள்ள நிலையில், இந்த ஏரிகள் ஏற்கெனவே நிரம்பி கடைவாசல் வழியேநீர் வெளியேறும் நிலையில் உள்ளன.
இதில், மகேந்திரவாடி ஏரியில் இருந்து தற்போது கடைவாசல் வழிந்து நீர் வெளியேறுவதால், தொடர்ந்து பாலகிருஷ்ணாபுரம் ஏரி, மேலேரி ஏரி, கீழ்வீதி ஏரி, பெரப்பேரி ஏரி ஆகியவையும் முழு கொள்ளளவை எட்டிவருகின்றன.
காவேரிப்பாக்கம் ஏரி நிரம்பி நீர் வெளியேற்றப்படுவதால், ராணிப்பேட்டை மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளில் உள்ள ஏறக்குறைய 75 சதவீத ஏரிகள் நீராதாரத்தைப் பெறும்.
இந்த நிலையில், நெமிலி வட்டத்தில் உள்ள விவசாயிகள் ஏரி நிரம்பியதால், தங்களது நிலங் களில் விவசாயப் பணிகளைத் தொடங்கி விட்டனர்.