உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள், பள்ளி மாணவர்களுக்கு தொழு நோய் பரிசோதனை

Published On 2023-07-22 08:50 GMT   |   Update On 2023-07-22 08:50 GMT
  • கலெக்டர் தகவல்
  • அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுக அறிவுரை

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்களை பரிசோதிக்கும் வகையில் வீடு வீடாகச் சென்று தொழுநோய் கண்டறியும் பணியானது கடந்த 17-ந் தேதி தொடங்கி வருகிற ஆகஸ்ட் 2-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த பணியில் ஆண், பெண் தன்னார்வலர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இதுவரை 1 லட்சத்து 14 ஆயிரத்து 157 பேருக்கு பரிசோதனை செய்துள்ளனர்.

இதில் ஒருவருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தொழு நோயின் ஆரம்ப அறிகுறிகளான உணர்ச்சியற்ற, வெளிர்ந்த, சிவந்த நிறத்தேமல், நரம்புகள் தடித்திருத்தல் போன்ற அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்து வமனையையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News